சுகாதார சேவையில் 2,800 சிறப்பு வைத்தியர்கள் இருக்க வேண்டியிருந்தாலும், தற்போது 2,000 பேர் மட்டுமே இருப்பதாக சுகாதார அமைச்சர் டொக்டர் நளிந்த ஜயதிஸ்ஸ இன்று (6) பாராளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
இந்த ஆண்டு வரவு செலவுத் திட்டத்தில் இருந்து சிறப்பு வைத்தியர்களுக்கு நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் கூறினார்.
ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார ஜயமஹா எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே ஜயதிஸ்ஸ இவ்வாறு தெரிவித்தார்