(எம்.எஸ்.எம்.ஸாகிர்)
சாய்ந்தமருது கமு/கமு/அல்-ஹிலால் வித்தியாலயத்தில் ஆசிரியையாகக் கடமையாற்றி, 02.05.2026 ஆம் திகதியுடன் தமது சீரிய பணியிலிருந்து ஓய்வுபெற்றுச் செல்லும் ஆசிரியை திருமதி எச்.ஏ. வாஹிட் அவர்களுக்கான பிரியாவிடை நிகழ்வும் சேவை நலன் பாராட்டு விழாவும் நேற்றைய தினம் (30) பாடசாலையின் கேட்போர் கூடத்தில் மண்டபத்தில் பாடசாலையின் அதிபர் கே.எல்.ஏ. ஜௌபர் தலைமையில் இடம்பெற்றது.
இதில் பிரதம அதிதியாக கல்முனை கல்வி வலய, பிரதிக் கல்விப் பணிப்பாளர் எம்.எச். ஜாபிர் கலந்து சிறப்பித்தார்.
இந்நிகழ்வில் சாய்ந்தமருது கோட்டக் கல்விப் பணிப்பாளர் திருமதி அஸ்மா மலிக், முன்னாள் அதிபர்களான யூ.எல். நசார், எம்.எச். நுஸ்ரத் பேகம், பாடசாலையின் அபிவிருத்தி சங்கத்தின் செயலாளர் பொறியியலாளர் கமால் நிஷாத் மற்றும் பிரதி அதிபர்கள், பகுதித் தலைவர்கள், ஆசிரியர்கள், அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், கல்விசாரா உத்தியோகத்தர்கள் மற்றும் மாணவர்கள் அனைவரும் இணைந்து இவ் விழாவை சிறப்பித்தனர்.
ஓய்வுபெற்றுச் செல்லும் ஆசிரியை திருமதி எச். ஏ. வாஹிட் அவர்களது குடும்பத்தினரும் இந் நிகழ்வில் கலந்து சிறப்பித்தனர்.








