ஏ.எஸ்.எம்.ஜாவித் 2025.01.14
தமிழர்களின் முக்கிய பண்டிகையான தைப்பொங்கள் தினம் 14.01.2025 உலகலாவிய ரீதியில் வாழும் இந்து மக்களால் சிறப்பாக கொண்டாடப்பட்டது.
இந்த வகையில் இலங்கை வாழ் மக்களும் இன்று புத்தாடை அணிந்து ஆலயங்கள்இ வீடுகள் மற்றும் தத்தமது தொழில் நிறுவனங்களிலும் சிறப்பாக கொண்டாடினர்.
கொழும்பு 12 இல் அமைந்துள்ள லோட்டஸ் மகால் தொடர்மாடி வீட்டுத் தொகுதியில் உள்ள இந்து மக்கள் தொடர்மாடி வீட்டுத் தொகுதியின் சங்கத்தின் உதவித் தலைவர் முரளிதாஸ் தலைமையில் பால்சோறு ஆக்கி பழங்கள் வைத்து சூரிய பகவானுக்கு நன்றி செலுத்தி பூஜை வழிபாடுகளில் ஈடுபட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.