ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணியின் தலைமைப் பயிற்சியாளர் பதவியிலிருந்து இலங்கை அணியின் முன்னாள் தலைவர் மஹேல ஜயவர்தன அண்மையில் விலகியிருந்தார்.
அவருக்குப் பதிலாக மேற்கிந்தியத் தீவுகள் அணியின் முன்னாள் சகலதுறை ஆட்டக்காரர் கீரன் பொல்லார்ட் நியமிக்கப்பட்டுள்ளார்.இந்நிலையில், மும்பை இந்தியன்ஸ் அணியின் பயிற்சியாளர்கள் குழுவிலிருந்து மூவர் பரஸ்பர இணக்கப்பாட்டுடன் விலகியுள்ளனர்.
அந்த வகையில், அணியின் வேகப்பந்துவீச்சுப் பயிற்சியாளராகப் பணியாற்றிய இலங்கை அணியின் முன்னாள் வேகப்பந்துவீச்சாளர் லசித் மாலிங்க, இந்திய அணியின் முன்னாள் வீரர் பராஸ் மாம்ப்ரே மற்றும் களத்தடுப்புப் பயிற்சியாளராகப் பணியாற்றிய இங்கிலாந்தின் முன்னாள் முதல்தரக் கிரிக்கெட் வீரர் கார்ல் ஹாப்கின்சன் ஆகியோர் தமது பொறுப்புகளில் இருந்து விலகியுள்ளனர்.








