உலக அளவில் மருத்துவம், இயற்பியல், வேதியியல், இலக்கியம், பொருளாதாரம், அமைதி ஆகிய துறைகளில் மகத்தான சாதனை படைப்பவர்களுக்கு ஆண்டுதோறும் நோபல் பரிசு வழங்கப்படுகிறது.
ஒக்டோபர் மாதத்தின் ஆறு நாட்கள், ஆறு பரிசுகள் அறிவிக்கப்படும்.
இந்நிலையில் 2025-ம் ஆண்டுக்கான நோபல் பரிசு பெறுவோர் விவரங்கள் இன்று முதல் அறிவிக்கப்படுகின்றன.
அதன்படி முதல் நாளான இன்று மருத்துவத்துக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.
மேரி இ.பிரன்கோவ் (Mary Brunkow),பிரெட் ரம்ஸ்டெல் (Fred Ramsdell) மற்றும் ஷிமோன் சககுச்சி (Shimon Sakaguchi) ஆகியோருக்கு 2025 ஆம் ஆண்டின் மருத்துவத்திற்கான நோபல் பரிசு பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்காவை சேர்ந்த இருவருக்கும், ஜப்பானை சேர்ந்த ஒருவருக்கும் இந்த நோபல் பரிசு பகிரப்பட்டுள்ளது.
புற நோயெதிர்ப்பு சகிப்புத்தன்மை தொடர்பான கண்டுபிடிப்புகளுக்காக இவர்களுக்கு இந்த நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.










