பெரும்போகத்தில் கிடைக்கும் அறுவடையை சதொச நிறுவனம் மற்றும் நெல் சந்தைப்படுத்தல் சபை என்பவற்றினூடாக விவசாயிகளிடமிருந்து கொள்வனவு செய்ய அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாகவும் நெல்லுக்கான உத்தரவாத விலையையும் அரிசிக்கான நிர்ணய விலையையும் விரைவில் வர்த்தமானியில் வெளியிடவுள்ளதாகவும் வர்த்தக, வாணிப, உணவுப் பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சர் வசந்த சமரசிங்க தெரிவித்தார்.
அநுராதபுரத்தில் நேற்று (16) ஊடகங்களுக்கு விளக்கமளிக்கையிலேயே இதனைக் குறிப்பிட்டார். அவர் மேலும் கூறியதாவது, சதொச நிறுவனம் மற்றும் நெல் சந்தைப்படுத்தல் சபை என்பவற்றினூடாக விவசாயிகளிடமிருந்து நெல் கொள்வனவு செய்ய நடவடிக்கை எடுக்கத் திட்டமிட்டுள்ளோம். பெரும் எண்ணிக்கையிலான நெற் களஞ்சியங்கள் சேதமடைந்த நிலைமையிலேயே இருக்கின்றன.
அவற்றை நெல் களஞ்சியப்படுத்துவதற்கு பொருத்தமான நிலைமைக்கு கொண்டுவரவும் கிளீன் ஸ்ரீ லங்காவினூடாக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. விரைவில் இந்த நடவடிக்கைகளை நிறைவு செய்ய எதிர்பார்த்துள்ளோம்.
🚫விவசாயிகளுக்கும் அநீதி ஏற்படாத வகையிலும் நுகர்வோருக்கும் அநீதி ஏற்படாத வகையிலும் நிர்ணய விலையை தீர்மானிக்க வேண்டியுள்ளது.
தற்போது ஒருகிலோ அரி சி 230 – 240 ரூபாவுக்கும் இடையில் விற்பனை செய்யப்படுகிறது. இதனைவிட அரி சி விலை அதிகரி ப்பதற்கு இடமளிக்க முடியாது. விவசாயிகளுக்கும் அதற்கு ஏற்ற விலை நிர்ணயிக்கப்படும். இந்த விடயங்கள் தொடர்பில் நன்கு ஆராய்ந்து நெல்லுக்கு உத்தரவாத விலையையும் அரிசிக்கு நிர்ணய விலையையும் விரைவில் அரச வர்த்தமானியில் வெளியிடப்படும் என்றார்.
சிவப்பு பச்சை அரிசிக்கான தட்டுப்பாடு தொடர்பில் நேற்று முன்தினம் ஊடகங்களுக்கு கருத்துத் தெரி விக்கையில், சந்தையில் சிவப்பு பச்சை அரி சிக்கு தட்டுப்பாடு நிலவுவதாகவும் அவ்வாறு இருந்தாலும் அதிக விலைக்கு விற்பனை செய்யப்படுவதாகவும் மக்கள் விசனம் தெரி விக்கின்றனர். மாத்தறை, காலி, ஹம்பாந்தோட்டை மற்றும் கிழக்கு பகுதிகளிலேயே இந்த சிவப்பு பச்சை அரி சி பயிரிடப்படுகிறது. இதுதொடர்பில் நாங்கள் சில ஆய்வுகளை முன்னெடுத்திருந்தோம்.
2024ஆம் ஆண்டில் 2,77,315 ஹெக்டேயர் விவசாய நிலத்தில் சிவப்பு பச்சை அரி சி பயிரிடப்பட்டுள்ளது. அந்த வருடத்தில் இரு போகங்களிலும் 1.1 மில்லியன் மெற்றிக் தொன் நெல் அறுவடை கிடைத்துள்ளது. இந்த வருடத்துக்கான பெரும்போகத்தில் 1,61,065 ஹெக்டேயர் விவசாய நிலத்தில் சிவப்பு பச்சை அரி சி பயிரிடப்பட்டுள்ளது. எனவே, இந்த அறுவடையின்போது 6,48,216 மெற்றிக் தொன் நெல் கிடைக்குமென எதிர்பார்க்கின்றோம். எனவே, இந்த வருடத்தில் சிவப்பு பச்சை அரி சிக்கான தட்டுப்பாடு ஏற்படாது.
2024ஆம் ஆண்டில் முன்னைய அரசாங்கத்தால் முன்னெடுக்கப்பட்ட ஒருசில வேலைத்திட்டங்களின் காரணமாகவே இன்று சிவப்பு பச்சை அரி சிக்கான தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இந்த தட்டுப்பாட்டை நிவர்த்தி செய்ய அரசாங்கத் தரப்பில் முடிந்த முயற்சிகளை எடுத்துள்ளோம். இந்தியாவுடனும் கலந்துரையாடி முயற்சித்துள்ளோம். விலைமனு கோரலையும் முன்வைத்துள்ளோம். எனவே, சிவப்பு பச்சை அரி சிக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது என்பதை ஒப்புக்கொள்கிறோம்.
எமது நாட்டில் 15 20 சதவீதமானவர்களாலேயே சிவப்பு பச்சை அரி சி நுகரப்படுகிறது. எனவே, எமது நாட்டில் அறுவடை செய்யப்படும் சிவப்பு பச்சை அரி சி எமது நுகர்வுக்கு போதுமனதாக இருக்கும். இதற்கு முன்னர் இவ்வாறு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. கடந்த ஜனாதிபதித் தேர்தலின்போது 20 கிலோ கிராம் சிவப்பு பச்சை அரி சி பகிரப்பட்டது. இந்த தீர்மானத்தை எடுக்கும்போது, சிவப்பு பச்சை அரி சி உண்ணாத மக்களுக்கும் அந்த அரிசியை விநியோகித்ததால் அந்த அரி சிக்கு தட்டுப்பாடு ஏற்படும் என்பதை அப்போதைய அரசாங்கம் தீர்மானித்திருக்க வேண்டும். ஆகவே, கடந்த அரசாங்கம் சிந்திக்காமல் எடுத்த தீர்மானத்தின் காரணமாகவே இன்று சிவப்பு பச்சை அரி சிக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டினார்