இஸ்மதுல் றஹுமான்
"மாற்றத்தை ஏற்றுக்கொள்வோம் போராட்டத்தை கைவிடாமல் இருப்போம்" எனும் தொனிப்பொருளில் காணாமல் போனாரின் குடும்ப ஒன்றியம் ஏற்பாடு செய்த காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான 34 வது வருடாந்த நினைவேந்தல் நிகழ்வு ஒன்றியத்தின் ஏற்பாட்டாளர் பிரிட்டோ பிரனாந்து தலைமையில் சீதுவ, ரத்தொழுகம காணாமல் போனவர்களின் நினைவு தூபிக்கு முன்னால் நேற்று 27ம் திகதி காலை இடம்பெற்றது. ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் பிரதிநிதியாக மஹிந்த ஜயசிங்க கலந்துகொண்டனர்.
காணாமல் ஆக்கப்பட்ட தமது உறவினர்களை நினைவு கூற நாட்டின் நாலாபாகங்களில் இருந்து வருகை வந்திருந்ததுடன் சர்வமதத் தலைவர்களும் வருகை தந்தனர். உறவினர்கள்
நினைவு தூபிக்கு மலர் அஞ்சலி செலுத்தினர்.