சுற்றுலா பங்களாதேஷ் மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையில் நடைபெறவுள்ள மட்டுப்படுத்தப்பட்ட ஓவர்கள் கொண்ட ஒருநாள் மற்றும் ரி20 சர்வதேச தொடருக்கான டிக்கெட் விற்பனை தொடர்பிலான அறிவிப்பு வெளியாகியுள்ளது.
ஒருநாள் மற்றும் ரி20 சர்வதேச தொடருக்கான டிக்கெட்டுகளை நாளை (24) முதல் இலங்கை கிரிக்கெட் சபையின் இணையத்தளத்துக்குள் பிரவேசித்து பெற்றுக்கொள்ள முடியும். அதேபோல நேரடி டிக்கெட் விற்பனை ஜூன் 29ஆம் திகதி ஆரம்பமாகும்.
இதற்கிடையில், நேரடி டிக்கெட்டுகளை கொழும்பு வித்தியா மாவத்தையிலும் (ஜூன் 29 முதல்), கண்டி பல்லேகலை சர்வதேச கிரிக்கெட் மைதானத்திலும் (ஜூலை 6 முதல்), மற்றும் தம்புள்ள ரங்கிரி சர்வதேச கிரிக்கெட் மைதானத்திலும் (ஜூலை 11 முதல்) உள்ள டிக்கெட் விற்பனை நிலைங்களுக்கு சென்று பெற்றுக்கொள்ள முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இரண்டு அணிகளுக்கும் இடையிலான ஒருநாள் தொடர் அடுத்த மாதம் 2ஆம் திகதியும், ரி20 தொடர் 10ஆம் திகதியும் ஆரம்பமாகிறது. டிக்கெட்டுக்கான ஆரம்ப விலை 500 ரூபாவாகும்.