2026 ஆம் ஆண்டுக்கான கால்பந்தாட்ட உலகக் கிண்ண தொடரின் 21.06.2026 போட்டியில் சவூதி அரேபியாவுக்கு எதிரான போட்டியில் ஸ்பெயின் அணி வெற்றியுடன் ஆரம்பித்துள்ளது.
இந்தப் போட்டியில் 4-0 என்ற கோல் கணக்கில் சவூதி அரேபிய அணியை ஸ்பெயின் அணி வீழ்த்தியுள்ளது.
லமின் யமால் போட்டியின் 10 வது நிமிடத்தில் ஸ்பெயின் அணிக்கான முதல் கோலை பெற்றார்.
அதன்பின்னர் மைக்கல் ஒயர்ஸபாய் 21 மற்றும் 24 வது நிமிடங்களில் அதிரடியாக ஸ்பெயின் அணிக்கான 2 கோல்களையும், ஹசன் போட்டியின் 49 வது நிமிடத்தில் மற்றொரு கோலையும் அணிக்காக பெற்றனர்.
எவ்வாறாயினும் சவூதி அரேபியாவினால் எவ்வித கோலையும் பெற்றுக்கொள்ள முடியவில்லை.
இதன்படி 4 – 0 என்ற கோல் கணக்கில் ஸ்பெயின் அணி வெற்றி பெற்றமை குறிப்பிடத்தக்கது.









