கடத்தல் நடவடிக்கைகள் மற்றும் எல்லைக் கட்டுப்பாடு உள்ளிட்ட மூலோபாய முக்கியத்துவம் வாய்ந்த விவகாரங்கள் தொடர்பில் பேச்சுவார்த்தை நடத்துவதற்காக ஈராக்கின் உயர்மட்ட பாதுகாப்புக் குழுவொன்று ஈரானின் தலைநகர் தெஹ்ரானைச் சென்றடைந்துள்ளது.
இதனை ஈரானுக்கான ஈராக் தூதுவர் உறுதிப்படுத்தியுள்ளார்.
இந் நிலையில், ஈரானின் உச்ச தலைவர் அலுவலக ஆலோசகரான மொஹமட் மொக்பர், அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் கருவியாக ஈராக் மாறக்கூடாது என எச்சரிக்கை விடுத்துள்ளார்.
ஈராக்கிய எண்ணெய் கடத்தலைத் தடுப்பதற்கும், ஊழலை ஒழிப்பதற்கும், அனைத்து ஆயுதங்களையும் அரசாங்கத்தின் முழுமையான கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவருவதற்கும் ஈராக் பிரதமர் முன்னெடுத்து வரும் முயற்சிகளை ட்ரம்ப் வெள்ளிக்கிழமை பாராட்டியிருந்தார்.இதற்குப் பதிலளிக்கும் வகையிலேயே மொஹமட் மொக்பர் இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளார்.








