ரஷ்ய கூட்டமைப்பின் தலைமை சட்டத்தரணி அலெக்சாண்டர் குட்சன் (Alexander Gutsan) உள்ளிட்ட 21 பேர் கொண்ட தூதுக்குழுவினர் இலங்கைக்கு வருகை தந்துள்ளனர்.
மொஸ்கோவிலிருந்து ரஷ்யாவுக்குச் சொந்தமான விசேட விமானம் மூலம் நேற்று (25) இரவு அவர்கள் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்தார்.
ரஷ்ய கூட்டமைப்பின் தலைமை சட்டத்தரணி அலெக்சாண்டர் குட்சனுடன் 21 பேர் கொண்ட தூதுக்குழுவினரும் இலங்கைக்கு வருகை தந்துள்ளனர்.
அவரது வருகையை முன்னிட்டு கட்டுநாயக்க விமான நிலையத்தில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கைக்கான ரஷ்யத் தூதுவர் லெவான் ஜகர்யன் மற்றும் இலங்கை சட்டமா அதிபர் திணைக்களத்தின் உயரதிகாரிகள் விமான நிலையத்திற்குச் சென்று அலெக்சாண்டர் குட்சனை வரவேற்றுள்ளனர்.
ரஷ்ய கூட்டமைப்பின் தலைமை சட்டத்தரணி அலெக்சாண்டர் குட்சனின் முதலாவது இலங்கை விஜயம் இதுவாகும்.
இந்த விஜயத்தின்போது அவர் இலங்கை சட்டமா அதிபர் பாரிந்த ரணசிங்கவைச் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார்.
இரு நாடுகளுக்கும் இடையிலான சட்டத்துறை சார்ந்த உறவுகளை மேலும் வலுப்படுத்துவதே இந்த விஜயத்தின் முக்கிய நோக்கமாகும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.








