நாட்டின் 23 மாவட்டங்களுக்கு பலத்த மின்னல் தொடர்பான எச்சரிக்கை அறிவிப்பை வளிமண்டலவியல் திணைக்களம் வெளியிட்டுள்ளது.
இதன்படி, அநுராதபுரம், அம்பாறை, களுத்துறை, கேகாலை, கிளிநொச்சி, குருநாகல், கொழும்பு, கம்பஹா, காலி, திருகோணமலை, நுவரெலியா, புத்தளம், பொலன்னறுவை, பதுளை, மட்டக்களப்பு, மன்னார், கண்டி, மாத்தளை, முல்லைத்தீவு, மொனராகலை, யாழ்ப்பாணம், இரத்தினபுரி மற்றும் வவுனியா ஆகிய மாவட்டங்களுக்கு இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இன்று (25) முற்பகல் 11.00 மணிக்கு வெளியிடப்பட்ட இந்த அறிவிப்பு, இன்று இரவு 11.30 மணி வரை அமுலில் இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய, குறித்த மாவட்டங்களின் சில பகுதிகளில் மாலை அல்லது இரவு வேளைகளில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இடியுடன் கூடிய மழையின்போது பலத்த மின்னல் தாக்கங்கள் ஏற்படுவதற்கான அதிக சாத்தியக்கூறுகள் காணப்படுவதால், பொதுமக்கள் அவதானத்துடன் செயற்படுமாறு வளிமண்டலவியல் திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது.








