2026ஆம் ஆண்டு முதல் இதுவரையான காலப்பகுதியில், இஸ்ரேல் இராணுவத்தில் பணியாற்றும் 23 வீரர்கள் மற்றும் அதிகாரிகள் தற்கொலை செய்துகொண்டு உயிரிழந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது கடந்த 16 ஆண்டுகளில் இஸ்ரேல் இராணுவத்தில் பதிவான அதிகூடிய வருடாந்த தற்கொலை எண்ணிக்கையாகும்.
இஸ்ரேலிய நாளிதழான ஹாரெட்ஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்தத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், காஸாவில் இஸ்ரேல் முன்னெடுத்துவரும் இனப்படுகொலைப் போரின்போது வழக்கமான இராணுவப் படையிலும் அல்லது ரிசர்வ் படையிலும் பணியாற்றிய 17 வீரர்கள், இவ்வாண்டு செயற்பாட்டு சேவையிலிருந்து விலகிய பின்னர் தற்கொலை செய்துகொண்டுள்ளதாகவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அத்துடன், 2026ஆம் ஆண்டில் ஐந்து பொலிஸ் அதிகாரிகளும் தற்கொலை செய்துகொண்டுள்ளனர்.
2023 ஒக்டோபரில் ஆரம்பமான போருக்குப் பின்னர், இஸ்ரேலின் பாதுகாப்புப் படைகளில் தற்கொலைச் சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்து வருவதை இந்தப் புள்ளிவிபரங்கள் எடுத்துக்காட்டுகின்றன.
போர் ஆரம்பமாவதற்கு முந்தைய பத்து ஆண்டுகளில், இஸ்ரேல் இராணுவத்தில் வருடாந்தம் சராசரியாக 12 தற்கொலைச் சம்பவங்களே பதிவாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.







