யெமனின் லஹிஜ் ஆளுநரகக் கடற்பரப்பில் எதிரி நாட்டுக்குச் சொந்தமான ‘Wing Loong II’ ரக ஆயுதம் தாங்கிய உளவு ஆளில்லா விமானத்தைச் சுட்டு வீழ்த்தியுள்ளதாக ஹூதிப் படையினர் தெரிவித்துள்ளனர்.
ஹூதிகளின் இராணுவப் பேச்சாளர் யஹ்யா சரீ இதனைத் தெரிவித்துள்ளார்.
சர்ச்சைக்குரிய பாப் அல்-மண்டப் நீரிணையை அண்டியுள்ள லஹிஜ் ஆளுநரகக் கடற்பரப்பிலேயே குறித்த ஆளில்லா விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
யெமன் அரசாங்கப் படைகளுக்கும் ஹூதிகளுக்கும் இடையிலான மோதல்கள் தீவிரமடைந்ததிலிருந்து, சீனாவில் தயாரிக்கப்பட்ட இவ்வகையான 11 ஆளில்லா விமானங்களைத் தமது படையினர் சுட்டு வீழ்த்தியுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.







