கண்டி ஸ்ரீ தலதா மாளிகையில் புனரமைக்கப்பட்ட தங்க விதானத்தை ஒளிரச் செய்யும் புதிய விளக்கு அமைப்பு அதிகாரப்பூர்வமாகத் திறந்து வைக்கப்பட்டுள்ளது.
இந்த நிகழ்வு அஸ்கிரி பீடத்தின் அனுநாயக்க தேரர், தாய்லாந்தின் வாட் மார்ப் ஜான் மடாலயத்தின் அதி வணக்கத்திற்குரிய லுவாங் போர் அனன் அகஞ்சகானோ தலைமையிலான மூத்த தாய்லாந்து பௌத்த பிக்குகள் குழு மற்றும் தியவதன நிலமே பிரதீப் நிலங்க தெல ஆகியோரின் முன்னிலையில் நடைபெற்றது.
ஜப்பானின் இவசாகி நிறுவனத்தால் தயாரிக்கப்பட்ட புதிய உயர் கற்றை கண் ஒளி (High-Beam Eye Light) அமைப்பு, மொசைக் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி புனரமைக்கப்பட்டுள்ள தங்க விதானத்தின் தோற்றத்தை மேம்படுத்தும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
இந்த நவீன விளக்கு அமைப்பு புனரமைக்கப்பட்ட தங்க விதானத்தை ஒளிரச் செய்து, அதன் கட்டடக்கலை அழகை வெளிப்படுத்துவதுடன், வரலாற்றுச் சிறப்புமிக்க இந்த பௌத்த ஆலயத்திற்கு புதிய காட்சியழகையும் சேர்க்கும்.
கண்டி ஸ்ரீ தலதா மாளிகை இலங்கையின் மிகவும் புனிதமான பௌத்த தலங்களில் ஒன்றாகும். இங்கு புத்த பெருமானின் புனித தந்த தாது பிரதிஷ்டை செய்யப்பட்டு பாதுகாக்கப்படுகிறது.









