கொழும்பு பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித்தின் 79ஆவது பிறந்தநாளை முன்னிட்டு, சர்வமதத் தலைவர்கள் அவருக்கு நேரில் சென்று பிறந்தநாள் வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளனர்.
நேற்று (15) அவரது பிறந்தநாளை முன்னிட்டு, தேசிய ஐக்கியத்துக்கான சர்வமதக் கூட்டமைப்பின் கிறிஸ்தவ விவகார இணைத் தலைவரான கொழும்பு பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித்தைச் சந்திப்பதற்காக, சர்வமதத் தலைவர்களான ஸ்ரீ ஹத்போதி விகாரையின் விகாராதிபதி சாஸ்திரபதி கலாநிதி கலகம தம்மரன்சி நாயக்க தேரர் மற்றும் குறித்த கூட்டமைப்பின் முஸ்லிம் விவகார இணைத் தலைவரான அல்-ஹாஜ் அஷ்-ஸெய்யித் கலாநிதி ஹஸன் மௌலானா அல்-காதிரி ஆகியோர் கொழும்பு பேராயர் இல்லத்துக்குச் சென்றுள்ளனர்.
இதன்போது, கர்தினால் மெல்கம் ரஞ்சித்துக்குப் பிறந்தநாள் வாழ்த்துகளைத் தெரிவித்ததுடன், இன மற்றும் மத நல்லிணக்கத்தை வலுப்படுத்துவதற்கான எதிர்கால வேலைத்திட்டங்களை முன்னெடுப்பது தொடர்பிலும் விசேட கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளது.








