இலங்கை கிரிக்கெட் சட்டமூலம், குடிவரவு சட்டமூலம் மற்றும் பயங்கரவாதத்திலிருந்து அரசைப் பாதுகாக்கும் சட்டமூலம் (PST) ஆகிய மூன்று முக்கிய சட்டமூலங்கள் தொடர்பான உயர் நீதிமன்றத்தின் தீர்மானங்கள் இன்று (12) பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன.
அரசியலமைப்பின் 120 மற்றும் 121ஆம் உறுப்புரைகளின் கீழ், குறித்த சட்டமூலங்களின் அரசியலமைப்புச் சட்ட ஏற்புடைமைக்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்ட மனுக்களைத் தொடர்ந்து இந்தத் தீர்மானங்கள் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன.
குறித்த மூன்று சட்டமூலங்கள் தொடர்பான முழுமையான உயர் நீதிமன்றத் தீர்மானங்களைப் பின்வரும் இணைப்புகளின் ஊடாகப் பார்வையிடலாம்.
https://www.newswire.lk/wp-content/uploads/2026/11/CRICKET-1_compressed.pdf
https://www.newswire.lk/wp-content/uploads/2026/11/Immigration_compressed.pdf
https://www.newswire.lk/wp-content/uploads/2026/11/PST-BILL-DETERMINATION-UNSIGNED_compressed.pdf





