கிராமப்புற பாலங்கள் புனரமைப்புக்கு 10,630 மில்லியன் ரூபா ஒதுக்கீடு!
கிராமப்புற பாலங்களை அபிவிருத்தி செய்வதற்கும் புனரமைப்பதற்கும் 10,630 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது.
கண்டி, அலவ்வ மற்றும் முத்தெட்டுகலவில் மேம்பாலங்கள்!
கண்டி பல்வகை போக்குவரத்து மத்திய நிலையத்திற்கான அணுகு வீதியிலும், அலவ்வ மற்றும் முத்தெட்டுகல ரயில் கடவைகளிலும் மேம்பாலங்கள் அமைக்கப்படவுள்ளன.
டிஜிட்டல் துறைக்கு 28.5 பில்லியன் ரூபா!
2027ஆம் ஆண்டில் டிஜிட்டல் மாற்றத்திற்காக 28.5 பில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது. இலங்கையின் டிஜிட்டல் துறையின் வரலாற்றில் இதுவே அதிகூடிய ஒதுக்கீடாகும்.
தனியார் துறையில் டிஜிட்டல் புத்தாக்க நிறுவனங்கள் மற்றும் புதிய தொழில் முயற்சிகளை ஊக்குவிப்பதற்காக 10 பில்லியன் ரூபாவும் ஒதுக்கப்பட்டுள்ளது.
வீதி மற்றும் ரயில் அபிவிருத்திக்கு 487 பில்லியன் ரூபா!
நாட்டின் வீதி மற்றும் ரயில் உட்கட்டமைப்புகளை அபிவிருத்தி செய்வதற்கும் நவீனமயப்படுத்துவதற்கும் 487 பில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது.
குருநாகல் – கலேவெல அதிவேக நெடுஞ்சாலைக்கு 30 பில்லியன் ரூபா!
குருநாகல் – தம்புள்ளை அதிவேக நெடுஞ்சாலையின் குருநாகல் முதல் கலேவெல வரையிலான பகுதியை நிர்மாணிப்பதற்காக 30 பில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது.
ருவன்புர அதிவேக நெடுஞ்சாலை நிர்மாணம் டிசம்பர் 1ஆம் திகதி ஆரம்பம்!
ருவன்புர அதிவேக நெடுஞ்சாலையின் நிர்மாணப் பணிகள் எதிர்வரும் டிசம்பர் முதலாம் திகதி ஆரம்பிக்கப்படவுள்ளன. இதற்காக 2027ஆம் ஆண்டில் மேலதிகமாக 27 பில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது.
தனியார் பல்கலைக்கழக மாணவர்களுக்கான கொடுப்பனவு அதிகரிப்பு!
தனியார் பல்கலைக்கழகங்களில் உயர்கல்வி பயிலும் மாணவர்களுக்கான மாதாந்தக் கொடுப்பனவு 6,250 ரூபாவிலிருந்து 10,000 ரூபாவாக 2027 ஏப்ரல் மாதம் முதல் அதிகரிக்கப்படவுள்ளது.
தரம் 2 மற்றும் தரம் 6 கல்வி மறுசீரமைப்புகள் அடுத்த ஆண்டு முதல்!
தரம் 2 மற்றும் தரம் 6 மாணவர்களுக்கான கல்வி மறுசீரமைப்புகள் அடுத்த ஆண்டு முதல் நடைமுறைப்படுத்தப்படவுள்ளன.
பல்கலைக்கழக அபிவிருத்திக்கு மேலதிக நிதி!
வவுனியா பல்கலைக்கழக ஊழியர்களுக்கான விடுதி வசதிகளை நிர்மாணிப்பதற்கு 2,050 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது.
டித்வா சூறாவளியினால் பாதிக்கப்பட்ட பேராதனை பல்கலைக்கழகம் உள்ளிட்ட பல்கலைக்கழகங்களைப் புனரமைப்பதற்கு மேலும் 750 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது.
புதிய தொலைத்தொடர்பு கோபுரங்களுக்கு ஐந்து வருட வரி விலக்கு!
கிராமப்புறங்களில் அதிவேக இணைய வசதிகளை விரிவுபடுத்தும் நோக்கில் புதிய தொலைத்தொடர்பு கோபுரங்களை அமைப்பதற்கான வரிகள் ஐந்து வருட காலத்திற்கு நீக்கப்படவுள்ளன.
அறநெறிப் பாடசாலை ஆசிரியர்களுக்கான கொடுப்பனவு 12,500 ரூபாவாக அதிகரிப்பு!
தகுதிபெற்ற அறநெறிப் பாடசாலை ஆசிரியர்களுக்கு வருடாந்தம் வழங்கப்படும் கொடுப்பனவு 7,500 ரூபாவிலிருந்து 12,500 ரூபாவாக அதிகரிக்கப்படவுள்ளது.





