கூரை சூரிய மின்சக்தி கட்டமைப்புகளுடன் மின்கல சேமிப்பு கட்டமைப்புகளைப் பொருத்தும் வீடுகளுக்கு நிதியுதவி வழங்க அரசாங்கம் முன்மொழிந்துள்ளது.
இதன்படி, ஒரு கிலோவாட்டுக்கு 25,000 ரூபா வீதம், அதிகபட்சமாக 10 கிலோவாட் திறன் கொண்ட கட்டமைப்புகளுக்கு 250,000 ரூபா வரை நிதியுதவி வழங்கப்படவுள்ளது.
இத்திட்டத்திற்காக 3.5 பில்லியன் ரூபா நிதி ஒதுக்கீடு செய்ய முன்மொழியப்பட்டுள்ளது.
மேலும், இறக்குமதி செய்யப்படும் சூரிய மின்கலங்களுக்கு விதிக்கப்படும் 10 சதவீத துறைமுகங்கள் மற்றும் விமான நிலையங்கள் அபிவிருத்தி அறவீட்டை (PAL) நீக்குவதற்கும் அரசாங்கம் முன்மொழிந்துள்ளது.






