2027ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்ட உரையை இன்று (12) பாராளுமன்றத்தில் நிகழ்த்திய ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க, ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனம் 528 பில்லியன் ரூபா மொத்த நட்டத்தைச் சந்தித்துள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
2008ஆம் ஆண்டு அப்போதைய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, தனிப்பட்ட பிரச்சினை ஒன்றின் காரணமாக எமிரேட்ஸ் விமான நிறுவனத்துடனான கூட்டாண்மையை இரத்துச் செய்ததாக ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.
இந்த முடிவைத் தொடர்ந்து ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனம் பாரிய நிதி இழப்புகளைச் சந்தித்துள்ளதாகவும், இதுவரை அதன் மொத்த நட்டம் 528 பில்லியன் ரூபாவை எட்டியுள்ளதாகவும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.






