அப்ரா அன்சார்
Samsung ஸ்ரீலங்கா நிறுவனம், Dialog Finance நிறுவனத்தின் ‘Lesi Pay’ இலகு தவணைக் கொடுப்பனவு வசதியை நாடு முழுவதிலுமுள்ள சுமார் 400 அங்கீகரிக்கப்பட்ட Samsung விற்பனை நிலையங்களுக்கு விரிவுபடுத்தியுள்ளது.
இதுவரை டயலொக் காட்சியறைகளில் மாத்திரம் வழங்கப்பட்டு வந்த இந்த வசதி, தற்போது அங்கீகரிக்கப்பட்ட Samsung விற்பனை நிலையங்கள் ஊடாகவும் வாடிக்கையாளர்களுக்குக் கிடைக்கவுள்ளது.
மேலும், 2026ஆம் ஆண்டின் இறுதிக்குள் இவ்வசதியை 1,000 விற்பனை நிலையங்களுக்கு விரிவுபடுத்த Samsung நிறுவனம் திட்டமிட்டுள்ளது.
இந்தத் திட்டத்தின் கீழ், தகுதியுடைய வாடிக்கையாளர்கள் கடனட்டை அல்லது பிணையாளர் இன்றி, மாதம் ரூ.3,657 முதல் தவணைக் கொடுப்பனவுகளில் அசல் Samsung சாதனங்களைக் கொள்வனவு செய்ய முடியும். இதற்காக அதிகபட்சமாக 18 மாதங்கள் வரை தவணைக் கால அவகாசம் வழங்கப்படுகிறது.
அத்துடன், அங்கீகரிக்கப்பட்ட விற்பனை நிலையங்களில் கொள்வனவு செய்யப்படும் சாதனங்களுக்கு Samsung நிறுவனத்தின் உத்தியோகபூர்வ உத்தரவாதமும், குறிப்பிட்ட நிபந்தனைகளுக்கு உட்பட்டு 24 மாதங்கள் வரையிலான Samsung Break-Free சலுகையும் வழங்கப்படவுள்ளது.
இந்தச் சலுகையானது Galaxy A07, Galaxy F07, Galaxy F06 5G, Galaxy A17 5G, Galaxy M17 5G ஆகிய ஸ்மார்ட்போன்கள் மற்றும் Galaxy Tab A11 டெப்லெட் ஆகியவற்றுக்குப் பொருந்தும்.
வாடிக்கையாளர்கள் Dialog Pay செயலியைப் பதிவிறக்கம் செய்து, தங்களது தகுதியை முன்கூட்டியே சரிபார்த்துக்கொள்ள முடியும். கடன் அனுமதி, திருப்பிச் செலுத்தும் காலம் மற்றும் வட்டி வீதம் ஆகியவை Dialog Finance நிறுவனத்தின் விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளுக்கு அமைய தீர்மானிக்கப்படும்.
இந்த விரிவாக்கம் தொடர்பில் கருத்துத் தெரிவித்த Samsung ஸ்ரீலங்கா மற்றும் மாலைதீவுக்கான முகாமைத்துவப் பணிப்பாளர் டோங்கியூன் லீ, நாடு முழுவதிலுமுள்ள வாடிக்கையாளர்கள் அசல் Samsung சாதனங்களை இலகுவாகப் பெற்றுக்கொள்வதற்கும், நிறுவனத்தின் உத்தரவாதம் மற்றும் விற்பனைக்குப் பிந்தைய சேவைகளைப் பெற்றுக்கொள்வதற்கும் இந்த விரிவாக்கம் வழிவகுக்கும் எனத் தெரிவித்துள்ளார்.
அதேவேளை, டயலொக் ஃபைனான்ஸ் பிஎல்சி நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரியும் பணிப்பாளருமான நசீம் மொஹமட் கருத்துத் தெரிவிக்கையில், கடனட்டை அல்லது பிணையாளர் இன்றி நெகிழ்வான மாதாந்தத் தவணைகளில் சாதனங்களைக் கொள்வனவு செய்வதற்கான வாய்ப்பை Lesi Pay வழங்குவதாகக் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், Samsung நிறுவனத்தின் அங்கீகரிக்கப்பட்ட விற்பனை வலையமைப்புக்கு இவ்வசதியை விரிவுபடுத்துவதன் மூலம் நாட்டின் அனைத்துப் பகுதிகளிலும் உள்ள வாடிக்கையாளர்களுக்கு நிதிச் சேவைகளை இலகுவாக அணுகுவதற்கான வாய்ப்பு ஏற்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
இச்சேவை தொடர்பான மேலதிக தகவல்களை Dialog Pay செயலி ஊடாகவோ அல்லது அருகிலுள்ள டயலொக் காட்சியறைகள் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட Samsung விற்பனை நிலையங்கள் ஊடாகவோ பெற்றுக்கொள்ள முடியும்.








