கொழும்பு – கண்டி பிரதான வீதியின் கடுகன்னாவ – கனேதென்ன இடையிலான வீதிப்பகுதியில் போக்குவரத்திற்காக ஒரு வழிப்பாதையை மாத்திரம் திறந்து வைக்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக கண்டி மாவட்டச் செயலாளர் இந்திக உடவத்த தெரிவித்துள்ளார்.
பாறைகள் மற்றும் மண்மேடு சரிவு அபாய நிலைமைகள் தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட கள ஆய்வுகளின் பின்னரே இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதன்படி, மழை பெய்யும் சந்தர்ப்பங்களில் இரவு வேளையில் குறித்த வீதியை மூடுவதற்கும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
எவ்வாறாயினும், சாரதிகள் முடிந்தவரை மாற்று வீதிகளைப் பயன்படுத்துமாறு கண்டி மாவட்டச் செயலாளர் இந்திக உடவத்த மேலும் கேட்டுக்கொண்டுள்ளார்.








