இலங்கையின் வர்த்தக வங்கிகளில் அமெரிக்க டொலருக்கு எதிரான இலங்கை ரூபாவின் பெறுமதி இன்று (06) வியாழக்கிழமையுடன் ஒப்பிடுகையில் சிறிதளவு வீழ்ச்சியடைந்துள்ளது.
இதன்படி, அமெரிக்க டொலரின் விற்பனை விலை ரூ.336 முதல் ரூ.337 வரையில் பதிவாகியுள்ளது.செலான் வங்கியின் இன்றைய நாணய மாற்று விகிதங்களின்படி, அமெரிக்க டொலரின் கொள்வனவு விலை ரூ.328.05 ஆகவும், விற்பனை விலை ரூ.337.30 ஆகவும் மாற்றமின்றிக் காணப்படுகிறது.
NDB வங்கியில், டொலரின் கொள்வனவு விலை ரூ.327.80 இலிருந்து ரூ.328.00 ஆக அதிகரித்துள்ளதுடன், விற்பனை விலை ரூ.336.80 இலிருந்து ரூ.337.00 ஆக அதிகரித்துள்ளது.
மக்கள் வங்கியில், டொலரின் கொள்வனவு விலை ரூ.328.30 இலிருந்து ரூ.328.35 ஆகவும், விற்பனை விலை ரூ.336.44 இலிருந்து ரூ.336.49 ஆகவும் அதிகரித்துள்ளது.
கொமர்ஷல் வங்கியில், டொலரின் கொள்வனவு விலை ரூ.326.58 இலிருந்து ரூ.326.38 ஆகவும், விற்பனை விலை ரூ.336.50 இலிருந்து ரூ.336.30 ஆகவும் குறைந்துள்ளது.
சம்பத் வங்கியில், அமெரிக்க டொலரின் கொள்வனவு விலை ரூ.328.50 ஆகவும், விற்பனை விலை ரூ.336.50 ஆகவும் மாற்றமின்றிக் காணப்படுகிறது.







