ஐக்கிய அரபு இராச்சியம் (UAE), எதிர்வரும் நவம்பர் மாதத்திற்கான பெற்றோல் மற்றும் டீசல் விலைகளைக் குறைப்பதாக அறிவித்துள்ளது.
தொடர்ச்சியாக மூன்று மாதங்களாக எரிபொருள் விலைகள் அதிகரிக்கப்பட்டு வந்த நிலையில், இந்த விலைக் குறைப்பு வாகன ஓட்டிகளுக்கு நிவாரணமாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதன்படி, நவம்பர் மாதத்தில் ஒரு லீற்றர் Super 98 ரக பெற்றோலின் விலை 4.40 திர்ஹமிலிருந்து 4.16 திர்ஹமாகக் குறைக்கப்பட்டுள்ளது. இதன் இலங்கை ரூபாய் மதிப்பு சுமார் 376 ரூபாவாகும்.
அதேவேளை, Special 95 ரக பெற்றோலின் விலையும் 4.28 திர்ஹமிலிருந்து 4.04 திர்ஹமாகக் குறைக்கப்பட்டுள்ளது. இதன் இலங்கை ரூபாய் மதிப்பு சுமார் 366 ரூபாவாகும்.
மேலும், E-Plus 91 ரக பெற்றோலின் விலை 4.21 திர்ஹமிலிருந்து 3.97 திர்ஹமாகக் குறைக்கப்பட்டுள்ளது. இதன் இலங்கை ரூபாய் மதிப்பு சுமார் 359 ரூபாவாகும்.
இதற்கிடையில், டீசல் விலையும் குறைக்கப்பட்டுள்ளது. ஒரு லீற்றர் டீசலின் விலை 4.80 திர்ஹமிலிருந்து 4.75 திர்ஹமாகக் குறைக்கப்பட்டுள்ளது. இதன் இலங்கை ரூபாய் மதிப்பு சுமார் 430 ரூபாவாகும்.
இந்தப் புதிய விலைகள் நவம்பர் 1ஆம் திகதி முதல் ஐக்கிய அரபு இராச்சியம் முழுவதும் அமுலுக்கு வருகின்றன.
இதன்படி, பெற்றோல் விலைகள் சுமார் 5.5 முதல் 5.7 சதவீதம் வரை குறைக்கப்பட்டுள்ளதுடன், டீசல் விலை சுமார் ஒரு சதவீதத்தால் குறைக்கப்பட்டுள்ளது.
மத்திய கிழக்கில் நிலவும் மோதல் நிலைமையுடன் தொடர்புடைய சர்வதேச எரிசக்திச் சந்தையின் விலை ஏற்ற இறக்கங்களுக்கு மத்தியில், தொடர்ச்சியாக மூன்று மாதங்களாக எரிபொருள் விலைகள் அதிகரிக்கப்பட்டிருந்தன.
இந்நிலையில், சர்வதேச எரிசக்திச் சந்தையின் நிலவரங்களுக்கு ஏற்ப ஐக்கிய அரபு இராச்சியம் மாதாந்தம் தனது உள்நாட்டு எரிபொருள் விலைகளை மீளாய்வு செய்து மாற்றியமைத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.







