பொலிஸ் காவலில் இருந்தபோது இளைஞர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் பணி இடைநீக்கம் செய்யப்பட்ட ஹோமாகம பொலிஸ் நிலையத்தின் குற்றத்தடுப்புப் பிரிவின் பொறுப்பதிகாரி, மேல் மாகாண தெற்கு குற்றத்தடுப்புப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
போதைப்பொருள் தொடர்பான குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட 29 வயதுடைய சந்தேகநபர் ஒருவர், ஹோமாகம பொலிஸ் நிலையத்தில் காவலில் வைக்கப்பட்டிருந்தபோது உயிரிழந்த சம்பவம் தொடர்பிலேயே குறித்த அதிகாரி பணி இடைநீக்கம் செய்யப்பட்டிருந்தார்.
இச்சம்பவம் தொடர்பில் குறித்த பொறுப்பதிகாரிக்கு மேலதிகமாக, ஹோமாகம பொலிஸ் நிலையத்தைச் சேர்ந்த உப பொலிஸ் பரிசோதகர் ஒருவரும் பொலிஸ் சார்ஜன்ட் ஒருவரும் பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
இச்சம்பவத்தில் உயிரிழந்தவர் கிரிவத்துடுவ பிரதேசத்தைச் சேர்ந்த இஷார ஹர்ஷ குமார எனும் 29 வயதுடைய இரண்டு பிள்ளைகளின் தந்தையாவார்.
பொலிஸாரின் கடுமையான தாக்குதலே அவரது உயிரிழப்புக்குக் காரணம் என உயிரிழந்தவரின் உறவினர்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.








