வரி செலுத்தாமல் சட்டவிரோதமான முறையில் நாட்டுக்கு இறக்குமதி செய்யப்பட்ட சொகுசு காரை வைத்திருந்தமை மற்றும் வரி ஏய்ப்பு செய்தமை ஆகிய குற்றச்சாட்டுகளை ஏற்றுக்கொள்வதாக முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
கொழும்பில் உள்ள பிரபல தனியார் விடுதியொன்றின் வாகன நிறுத்துமிடத்தில் கைவிடப்பட்ட நிலையில் மீட்கப்பட்ட குறித்த சொகுசு கார் தொடர்பான வழக்கில், தனது சட்டத்தரணிகள் ஊடாக அவர் இந்த விடயத்தை நீதிமன்றத்துக்கு அறிவித்துள்ளார்.
இந்நிலையில், இந்த விவகாரம் தொடர்பான தீர்மானத்தை எதிர்வரும் நவம்பர் மாதம் 11ஆம் திகதி நீதிமன்றம் அறிவிக்கவுள்ளது.








