இஸ்ரேலிய எதிர்க்கட்சித் தலைவர் கடி ஐசன்கோட் தலைமையில் கூட்டணி அரசாங்கம் அமைக்கப்படும் என நம்பிக்கை கொண்டுள்ளதாக அவரது ஆதரவாளர்கள் தெரிவித்துள்ளனர்.
டெல் அவிவில் கருத்துத் தெரிவித்த தால் ஸெய்லிங்கர், “இஸ்ரேலிய மக்கள் நெதன்யாகுவுக்கு மீண்டும் ஒரு பதவிக்காலத்தை வழங்க விரும்பவில்லை. இருப்பினும், என்ன நடக்கிறது என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்” எனக் குறிப்பிட்டுள்ளார்.
தேர்தல் முடிவுகள் தொடர்பில் இதுவரை எதுவும் உறுதியாகத் தெரியவில்லை எனவும், நிலைமை மிகவும் நிச்சயமற்றதாகக் காணப்படுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
ரொய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்திடம் மேலும் கருத்துத் தெரிவித்த அவர், ஆட்சிமாற்றத்திற்கான நம்பிக்கை இன்னும் இருப்பதாகக் குறிப்பிட்டுள்ளார்.
“கடி ஐசன்கோட் அடுத்த பிரதமராக வருவார் என நம்புகிறோம்” எனவும் அவர் தெரிவித்துள்ளார்.








