இஸ்ரேல் நாடாளுமன்றத் தேர்தலில் நான்கில் ஒரு பங்குக்கும் அதிகமான வாக்குகள் எண்ணப்பட்டுள்ள நிலையில், பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவின் லிகுட் கட்சி தொடர்ந்து முன்னிலை வகிக்கிறது.
இஸ்ரேலின் மத்திய தேர்தல்கள் குழுவின் உத்தியோகபூர்வ தகவல்களின்படி, சர்வதேச நேரப்படி அதிகாலை 02:47 மணியளவில் 16 இலட்சத்துக்கும் அதிகமான வாக்குகள் எண்ணப்பட்டுள்ளன.
எண்ணப்பட்ட செல்லுபடியான வாக்குகளில் நெதன்யாகுவின் லிகுட் கட்சி 22.24 சதவீத வாக்குகளைப் பெற்றுள்ளது. இதற்கு முந்தைய அறிவிப்பில் அக்கட்சி 23.36 சதவீத வாக்குகளைப் பெற்றிருந்தது.
இதற்கிடையில், கடி ஐசன்கோட்டின் யாஷார் கட்சி 15.41 சதவீத வாக்குகளுடன் இரண்டாவது இடத்தில் உள்ளது. முந்தைய அறிவிப்பில் அக்கட்சி 15.74 சதவீத வாக்குகளைப் பெற்றிருந்தது.
பாலஸ்தீனிய மற்றும் இஸ்ரேலிய அரசியல் தரப்புகளை உள்ளடக்கிய கூட்டுப் பட்டியல் 8.28 சதவீத வாக்குகளுடன் மூன்றாவது இடத்திற்கு முன்னேறியுள்ளது.
நப்தாலி பென்னட்டின் கட்சி 8.22 சதவீத வாக்குகளைப் பெற்று நான்காவது இடத்தில் உள்ளது.
இதேவேளை, இந்தத் தேர்தலில் வாக்களிக்கத் தகுதிபெற்ற சுமார் 73.3 இலட்சம் பேரில், 56.9 இலட்சத்துக்கும் அதிகமானோர் வாக்களித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
எனினும், தற்போது வெளியாகியுள்ள தேர்தல் முடிவுகள் ஆரம்பகட்ட முடிவுகளாகும். வாக்கு எண்ணிக்கை நிறைவடைந்த பின்னரே இறுதி முடிவுகள் உறுதிப்படுத்தப்படும்.








