இஸ்ரேலிய மக்கள் மாற்றத்தை விரும்பி வாக்களித்துள்ளதாகவும், பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவின் பொய்களால் அவர்கள் சோர்வடைந்துள்ளதாகவும் இஸ்ரேலிய எதிர்க்கட்சித் தலைவர் கடி ஐசன்கோட் தெரிவித்துள்ளார்.
வாக்குப்பதிவு நிறைவடைந்த பின்னர் வெளியிட்ட தனது முதலாவது பொதுக் கருத்தில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
மேலும், இஸ்ரேலின் பாதுகாப்பு விவகாரங்களைத் தனது அரசியல் நலன்களுக்காகப் பயன்படுத்த வேண்டாம் எனத் தனது அரசியல் போட்டியாளரான பெஞ்சமின் நெதன்யாகுவுக்கு அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.








