மக்கா கூட்டணி நாடுகளுக்கும் ஈரானுக்கும் இடையில் இடம்பெற்ற சந்திப்பைத் தொடர்ந்து, பிராந்திய ஒத்துழைப்பை வலுப்படுத்துவதற்கான பேச்சுவார்த்தைகளைத் தொடர்ந்து முன்னெடுப்பதற்கு நான்கு நாடுகளும் இணக்கம் தெரிவித்துள்ளதாக ஈரான் அறிவித்துள்ளது.
ஈரானிய அதிகாரிகள் வெளியிட்டுள்ள அறிக்கையை மேற்கோள்காட்டி, ஃபார்ஸ் செய்தி நிறுவனம் இந்தத் தகவலை வெளியிட்டுள்ளது.
ஈரானின் பாதுகாப்புத் துறைத் தலைவர் மொஹ்சென் ரெசாயி தலைமையில் நடைபெற்ற இந்தச் சந்திப்பில், சவூதி அரேபிய பாதுகாப்பு அமைச்சர் காலித் பின் சல்மான், பாகிஸ்தான் இராணுவத் தளபதி அசிம் முனீர் மற்றும் துருக்கி உளவுத்துறைத் தலைவர் இப்ராஹிம் கலின் ஆகியோர் பங்கேற்றுள்ளனர்.
இதன்போது, பிராந்தியத்தில் அமைதி மற்றும் பாதுகாப்பை உறுதிப்படுத்துவது தொடர்பில் முக்கிய கவனம் செலுத்தப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், பிராந்திய நாடுகளுக்கு இடையிலான ஒத்துழைப்பை வலுப்படுத்துவதற்கும், அமைதி மற்றும் பாதுகாப்பை மேம்படுத்துவதற்கும் தொடர்ந்து பேச்சுவார்த்தைகளை முன்னெடுப்பதற்கு நான்கு நாடுகளும் இணக்கம் தெரிவித்துள்ளதாக அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.







