ஈரான் மீதான அமெரிக்க – இஸ்ரேலியப் போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான சர்வதேச முயற்சிகள் தீவிரமடைந்து வரும் நிலையில், ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டின், ஈரான் ஜனாதிபதி மசூத் பெசெஷ்கியான் மற்றும் கட்டார் மன்னர் ஷேக் தமீம் பின் ஹமத் அல் தானி ஆகியோரை நாளை செவ்வாய்க்கிழமை (27) மொஸ்கோவில் சந்திக்கவுள்ளதாக கிரெம்ளின் அறிவித்துள்ளது.
எரிவாயு ஏற்றுமதி நாடுகள் மன்றத்தின் தலைவர்களுடனான சந்திப்பை நடத்தி முடித்த பின்னர், புட்டின் இந்தத் தலைவர்களைச் சந்திக்கவுள்ளதாக ரஷ்ய ஜனாதிபதியின் உதவியாளர் யூரி உஷாகோவ் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.
ஈரான் மீதான அமெரிக்க – இஸ்ரேலியப் போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான இராஜதந்திர முயற்சிகள் தீவிரமடைந்து வரும் நிலையில், இந்தச் சந்திப்பு முக்கியத்துவம் பெற்றுள்ளது.








