யெமனின் மூன்றாவது பெரிய நகரமான தாயிஸைக் கைப்பற்றுவதற்கான போர், தீர்மானிக்கும் கட்டத்தை எட்டியுள்ளதாக நியூ அமெரிக்கா ஆய்வு நிறுவனத்தின் எதிர்காலப் பாதுகாப்புத் திட்ட ஆய்வாளர் ஆடம் பரோன் தெரிவித்துள்ளார்.
தாயிஸ் நகருக்கு அருகிலுள்ள மூலோபாய முக்கியத்துவம் வாய்ந்த ஜபல் சப்ர் மலையைக் கைப்பற்றுவது, நகரைக் கைப்பற்றுவதற்கான போரில் வெற்றி தோல்வியைத் தீர்மானிக்கும் முக்கிய காரணியாக அமையும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த மோதல் ஓரளவுக்குக் குறியீட்டு முக்கியத்துவத்தைக் கொண்டிருந்தாலும், அதைவிட முக்கியமாகப் புவியியல் அமைப்புடன் தொடர்புடையது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
மேலும், தாயிஸ் நகரத்தின் மீதான கட்டுப்பாட்டைப் பேணுவதற்கு ஜபல் சப்ர் மலையின் கட்டுப்பாடு மிகவும் அவசியமானது என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதற்கிடையில், ஈரான் ஆதரவு ஹூதி கிளர்ச்சிப் படையினர் தாயிஸ் நகரை நோக்கி முன்னேறி வரும் நிலையில், சவூதி அரேபியாவின் ஆதரவைப் பெற்ற சர்வதேச அங்கீகாரம் பெற்ற யெமன் அரசுப் படையினர் நகரத்தின் மீதான தமது கட்டுப்பாட்டைத் தக்கவைத்துக் கொள்வதற்காகப் போரிட்டு வருகின்றனர்.இதனால், தாயிஸ் நகரைச் சுற்றியுள்ள மோதல்கள் தீவிரமடைந்து வருகின்றன.








