ஈரான் – பாகிஸ்தான் எல்லைப் பகுதியில் அடையாளம் தெரியாத ஆயுதக் குழுவினருக்கும் ஈரானிய பாதுகாப்புப் படையினருக்கும் இடையில் கடும் மோதல் இடம்பெற்றுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஹால்வாஷ் (Haalvsh) மனித உரிமைகள் அமைப்பு இந்தத் தகவலை வெளியிட்டுள்ளது.
அதன்படி, ஈரானின் சிஸ்தான் மற்றும் பலுசிஸ்தான் மாகாணத்தில், எல்லை நகரமான சரவானுக்கு அருகிலுள்ள பக்ஷான் மாவட்டத்தில் சனிக்கிழமை (24) அதிகாலை இந்த மோதல் ஆரம்பித்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, இந்த மாதத்தில் குறித்த பகுதியில் குறைந்தது நான்கு ஈரானிய பாதுகாப்புப் படையினர் கொல்லப்பட்டுள்ளனர்.
மேலும், ஒக்டோபர் மாத ஆரம்பத்தில், பயங்கரவாதக் குழு எனக் கூறப்படும் அமைப்பொன்றை அழித்துள்ளதாக ஈரானின் இஸ்லாமிய புரட்சிகர காவல்படை (IRGC) அறிவித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.







