நிலவும் சீரற்ற வானிலை காரணமாக, களு கங்கையை அண்மித்த தாழ்நிலப் பகுதிகளில் சிறு வெள்ளப்பெருக்கு ஏற்படும் அபாயம் உள்ளதாக நீர்ப்பாசனத் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இது தொடர்பில் விசேட அறிக்கையொன்றை வெளியிட்டுள்ள திணைக்களம், அடுத்த 24 மணித்தியாலங்களுக்குள் இந்நிலை ஏற்படக்கூடும் எனத் தெரிவித்துள்ளது.
இதன்படி, இரத்தினபுரி மாவட்டத்தின் பெல்மதுளை, நிவித்திகல, இரத்தினபுரி, குருவிட்ட, அயகம மற்றும் எலபாத ஆகிய பிரதேச செயலகப் பிரிவுகளிலும், களுத்துறை மாவட்டத்தின் இங்கிரிய, ஹொரணை, தொடங்கொடை, மில்லனிய, புளத்சிங்ஹள, மதுராவல மற்றும் பாலிந்தநுவர ஆகிய பிரதேச செயலகப் பிரிவுகளிலும் உள்ள களு கங்கையை அண்மித்த தாழ்நிலப் பகுதிகளில் சிறு வெள்ளப்பெருக்கு ஏற்படக்கூடும் எனத் திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளது.
எனவே, குறித்த பகுதிகளில் வசிக்கும் பொதுமக்களும், அப்பகுதிகளினூடாகப் பயணிக்கும் சாரதிகளும் மிகுந்த அவதானத்துடன் செயற்படுமாறு நீர்ப்பாசனத் திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது.







