பிராந்தியம் முழுவதும் முன்னெப்போதும் இல்லாத பாதுகாப்பு அச்சுறுத்தல்கள் நிலவுவதன் விளைவாகவே பத்ர் பாதுகாப்பு ஒப்பந்தம் நடைமுறைக்கு வந்துள்ளதாக பாதுகாப்பு ஆய்வாளர் ரஷீத் அல்-மொஹன்னதி தெரிவித்துள்ளார்.
துருக்கி, கட்டார், பாகிஸ்தான் மற்றும் இந்தோனேசியா ஆகிய நாடுகளுக்கு இடையிலான இந்தப் பாதுகாப்பு ஒப்பந்தம், குறித்த நாடுகள் எதிர்கொள்ளும் தனித்துவமான சவால்களைக் கருத்தில் கொள்ளும்போது பல்வேறு வழிகளிலும் பொருத்தமானதாக அமைவதாக சர்வதேச கொள்கை ஆய்வு மையத்தின் (Center for International Policy Research) துணைத் தலைவரான ரஷீத் அல்-மொஹன்னதி தெரிவித்துள்ளார்.
உள்நாட்டு பாதுகாப்புத் தொழில்துறையைக் கொண்ட நாடுகள், அத்தகைய தொழில்துறை இல்லாத நாடுகளுடன் ஒப்பிடுகையில், ஒரே அளவிலான இராணுவத் திறன்களைப் பெறுவதற்குக் குறைந்தளவு பாதுகாப்புச் செலவையே மேற்கொள்வதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
“இதற்குப் பொருளாதார அடிப்படையிலான நியாயம் உள்ளது. இது துறைசார் பல்வகைப்படுத்தலுக்கான மிகச் சிறந்த அணுகுமுறையாகும்” என அவர் அல் ஜசீராவிடம் தெரிவித்துள்ளார்.
மேலும், ஐக்கிய இராச்சியம் மற்றும் பிரான்ஸ் போன்ற மேற்கத்திய நாடுகளைச் சார்ந்திருப்பதற்குப் பதிலாக, பிராந்தியத்திற்குள் தங்களது இராணுவத் தேவைகளைப் பூர்த்தி செய்துகொள்வதற்கும் இந்த ஒப்பந்தம் சம்பந்தப்பட்ட நாடுகளுக்கு மூலோபாய ரீதியில் பயனளிக்கும் என அவர் தெரிவித்துள்ளார்.




