சபாநாயகர் தலைமையில் இன்றைய (21) பாராளுமன்ற நடவடிக்கைகள் தற்போது ஆரம்பமாகியுள்ளன.
இதற்கமைய, இன்றைய பாராளுமன்ற நடவடிக்கைகள் காலை 9.30 மணி முதல் காலை 10.00 மணி வரை நிலையியற் கட்டளை 22(1) முதல் 22(6) வரையான பாராளுமன்ற அலுவல்களுடன் ஆரம்பமாகின்றன.
காலை 10.00 மணி முதல் 11.00 மணி வரை வாய்மூல விடைகளுக்கான வினாக்களுக்கும், காலை 11.00 மணி முதல் 11.30 மணி வரை பாராளுமன்ற நிலையியற் கட்டளை 27(2) இன் கீழான கேள்விகளுக்கும் நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது.
தொடர்ந்து, காலை 11.30 மணி முதல் மாலை 5.00 மணி வரை பொதுத் தனியார் முகாமைத்துவச் சட்டம் மற்றும் குறைநிரப்பு மதிப்பீடு ஆகியவற்றை அங்கீகரிப்பது தொடர்பான விவாதம் இடம்பெறவுள்ளது.
இதனையடுத்து, மாலை 5.00 மணிக்கு ஐந்து சட்டரீதியாக நிறுவப்பட்ட நிறுவனங்களின் ஆண்டறிக்கைகள் விவாதமின்றி அங்கீகரிக்கப்படவுள்ளன.
மேலும், மாலை 5.00 மணி முதல் 5.30 மணி வரை ஒத்திவைப்பு நேரத்தின்போதான கேள்விகளுக்காக நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது.
இன்றைய பாராளுமன்ற நடவடிக்கைகளின் நேரடி ஒளிபரப்பைக் கீழே காணலாம்.








