அமெரிக்க டொலருக்கு நிகராக இலங்கை ரூபாவின் பெறுமதி, நாட்டின் வர்த்தக வங்கிகளில் இன்று (15) மேலும் வீழ்ச்சியடைந்துள்ளது.
இதன்படி, அமெரிக்க டொலரின் விற்பனை விலை 335 ரூபாய் முதல் 336 ரூபாய் வரை பதிவாகியுள்ளது.
செலான் வங்கி
செலான் வங்கியில் அமெரிக்க டொலரின் கொள்வனவு விலை மாற்றமின்றி 326.75 ரூபாயாகவும், விற்பனை விலை மாற்றமின்றி 336 ரூபாயாகவும் பதிவாகியுள்ளது.
NDB வங்கி
NDB வங்கியில் அமெரிக்க டொலரின் கொள்வனவு விலை 326.50 ரூபாயிலிருந்து 326.65 ரூபாயாகவும், விற்பனை விலை 335.50 ரூபாயிலிருந்து 335.65 ரூபாயாகவும் அதிகரித்துள்ளது.
மக்கள் வங்கி
மக்கள் வங்கியில் அமெரிக்க டொலரின் கொள்வனவு விலை 326.92 ரூபாயிலிருந்து 327.07 ரூபாயாகவும், விற்பனை விலை 335.03 ரூபாயிலிருந்து 335.18 ரூபாயாகவும் அதிகரித்துள்ளது.
கொமர்ஷல் வங்கி
கொமர்ஷல் வங்கியில் அமெரிக்க டொலரின் கொள்வனவு விலை 324.84 ரூபாயிலிருந்து 325.09 ரூபாயாகவும், விற்பனை விலை 334.75 ரூபாயிலிருந்து 335 ரூபாயாகவும் அதிகரித்துள்ளது.
சம்பத் வங்கி
சம்பத் வங்கியில் அமெரிக்க டொலரின் கொள்வனவு விலை 327 ரூபாயிலிருந்து 327.25 ரூபாயாகவும், விற்பனை விலை 335 ரூபாயிலிருந்து 335.25 ரூபாயாகவும் அதிகரித்துள்ளது.
நேற்றைய புதன்கிழமையுடன் ஒப்பிடுகையில், பெரும்பாலான வர்த்தக வங்கிகளில் அமெரிக்க டொலரின் கொள்வனவு மற்றும் விற்பனை விலைகள் அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.







