கொழும்பு குற்றத்தடுப்புப் பிரிவு அதிகாரிகளினால் உலப்பனை சுமங்கல தேரரிடம் சுமார் நான்கு மணிநேரம் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டுள்ளது.
கொழும்பு விஹாரமஹாதேவி பூங்காவில் பலாங்கொட கஸ்ஸப தேரர் மீது பொலிஸார் தாக்குதல் நடத்தியதாக உலப்பனை சுமங்கல தேரர் வெளியிட்ட கருத்து தொடர்பிலேயே இந்த வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டுள்ளது.
உலப்பனை சுமங்கல தேரர் சேவையாற்றும் நாரஹேன்பிட்டிய டட்லி சேனாநாயக்க வித்தியாலயத்தில் வைத்து இந்த வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.








