20,000-க்கும் மேற்பட்ட சிறுவர்கள் கொல்லப்பட்டுள்ளனர். மேலும், 60,000 சிறுவர்கள் தாயையோ, தந்தையையோ அல்லது இருவரையுமோ இழந்துள்ளனர்.
பலஸ்தீனத்தின் காஸாவில் இஸ்ரேல் முன்னெடுத்து வரும் இனப்படுகொலைப் போர், சிறுவர்களின் குழந்தைப் பருவத்தைப் பறித்துள்ளதுடன், குடும்பங்களையும் சிதைத்துள்ளது.
இதன் காரணமாக, பல்லாயிரக்கணக்கான சிறுவர்கள் தங்களுக்குத் துணையாக இருக்க வேண்டிய பெற்றோரை இழந்து, எதிர்காலத்தை எதிர்கொள்ள வேண்டிய துயரமான நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், குளிர்காலம் நெருங்கி வரும் நிலையில், இடம்பெயர்வு மற்றும் மோசமான வாழ்வாதாரச் சூழ்நிலைகள் காரணமாக, இந்தச் சிறுவர்களின் உயிர்வாழ்வுக்கே அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.







