காஸா மீது இஸ்ரேல் முன்னெடுத்த போர் சந்தேகத்திற்கு இடமின்றி இனப்படுகொலை என கட்டார் அமீர் ஷேக் தமீம் பின் ஹமத் அல் தானி தெரிவித்துள்ளார்.
இந்த இனப்படுகொலைக்குப் பொறுப்பானவர்கள் எவ்விதத்திலும் தண்டனையிலிருந்து தப்பிக்க அனுமதிக்கப்படக் கூடாது என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
மேலும், பலஸ்தீன விவகாரம் கட்டாரின் முன்னுரிமைகளில் தொடர்ந்து முக்கிய இடத்தைப் பிடித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.








