தடுப்புக் காவலில் வைக்கப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வந்த ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் கொழும்பு மாநகரசபையின் முன்னாள் உறுப்பினர் மஹிந்த கஹந்தகமவை எதிர்வரும் ஒக்டோபர் 26ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
நுகேகொட நீதவான் நீதிமன்றத்தில் இன்று (12) ஆஜர்படுத்தப்பட்டதை அடுத்தே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
மத்திய குற்ற விசாரணைப் பிரிவினரால் கடந்த 6ஆம் திகதி கைது செய்யப்பட்ட அவரை, இன்று (12) வரை தடுப்புக் காவலில் வைத்து விசாரணை செய்வதற்கு நீதிமன்றம் அனுமதி வழங்கியிருந்தது.
மஹிந்த கஹந்தகம ஐஸ் போதைப்பொருள் வர்த்தகத்தில் ஈடுபட்டு வருவதாகக் கிடைத்த தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின்போதே, அவர் ஐஸ் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.








