மொரட்டுவை மாவட்ட நீதிமன்ற நீதிபதியும், கொழும்பு கோட்டை முன்னாள் பிரதம நீதவானுமான திலின கமகேயை நீதித்துறைப் பதவியிலிருந்து நீக்குவதற்கு நீதிச் சேவை ஆணைக்குழு தீர்மானித்துள்ளது.
அவருக்கு எதிராகச் சுமத்தப்பட்டிருந்த குற்றச்சாட்டுகள் தொடர்பான விசாரணைகளின் முடிவில், அவை நிரூபிக்கப்பட்டதைத் தொடர்ந்து இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
சட்டவிரோதமான முறையில் யானைக்குட்டியொன்றைத் தம்வசம் வைத்திருந்தமை உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகள் அவருக்கு எதிராகச் சுமத்தப்பட்டிருந்தன.
இது தொடர்பான விசாரணைகளைத் தொடர்ந்து ஏற்கனவே அவரது பணி இடைநிறுத்தப்பட்டிருந்த நிலையில், தற்போது அவர் நீதித்துறைப் பதவியிலிருந்து முழுமையாக நீக்கப்பட்டுள்ளார்.








