களுத்துறை, நாகொட பகுதியில் அமைந்துள்ள உணவகம் ஒன்றில் இன்று (09) காலை இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில், அதன் உரிமையாளர் உயிரிழந்துள்ளார்.
இந்தச் சம்பவத்தில் காயமடைந்த அவரது மனைவி, சிகிச்சைக்காக நாகொட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.








