சவூதி அரேபியாவின் ரியாத் நகருக்கான விமான சேவைகளை நாளை (10) வரை ரத்து செய்ய ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் (SriLankan Airlines) நடவடிக்கை எடுத்துள்ளது.
மத்திய கிழக்கில் நிலவும் பாதுகாப்பு சூழ்நிலையைக் கருத்திற்கொண்டு இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இதேவேளை, ஹூதி அமைப்பினரின் தாக்குதல்கள் காரணமாக உலகின் பல்வேறு பகுதிகளிலிருந்து ரியாத் நகருக்குச் செல்லவிருந்த 300க்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.








