பாராளுமன்ற உறுப்பினர் திலித் ஜயவீர, முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களான விமல் வீரவங்ச மற்றும் உதய கம்மன்பில உள்ளிட்ட ஆறு பேருக்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்டுள்ள நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்பில், மூவரடங்கிய மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர்கள் குழாம் அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளது.
இதன்படி, சட்டத்தரணிகளுக்குத் தேவையான ஆவணங்கள் மற்றும் தகவல்களை வழங்குவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு நீதிமன்றப் பதிவாளருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
குறித்த ஆவணங்கள் மற்றும் தகவல்கள் தொடர்பான முன்னேற்றத்தை ஆராய்வதற்காக இவ்வழக்கு எதிர்வரும் ஒக்டோபர் 15ஆம் திகதி மீண்டும் பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.
இதேவேளை, பிரதிவாதிகள் தரப்பு சட்டத்தரணிகள் தங்களது சமர்ப்பணங்களை முன்வைப்பதற்காக இவ்வழக்கு ஒக்டோபர் 23ஆம் திகதி மீண்டும் மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.







