முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மனைவியும், முன்னாள் முதற்பெண்மணியுமான ஷிராந்தி ராஜபக்ஷ சற்றுமுன்னர் இலஞ்ச, ஊழல் ஆணைக்குழுவுக்கு அழைத்துவரப்பட்டுள்ளார்.
இன்று (7) முற்பகல் இலஞ்ச, ஊழல் ஆணைக்குழு அதிகாரிகளால் அவர் கைது செய்யப்பட்டார்.
கிருலப்பனையில் உள்ள அவரது வீட்டில் வைத்து ஆணைக்குழு அதிகாரிகள் அவரிடம் வாக்குமூலம் பதிவு செய்திருந்தனர்.
சுமார் இரண்டு மணிநேர வாக்குமூலத்தின் பின்னர் அவர் கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
சிரிலிய சவிய கணக்கில் இடம்பெற்றதாக கூறப்படும் முறைகேடுகள் தொடர்பான குற்றச்சாட்டுகளின் அடிப்படையிலேயே இந்த கைது இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.








