யெமனில் ஹூதி அமைப்பினரால் தடுத்து வைக்கப்பட்டிருந்த தமது ஊழியர் ஒருவர் விடுதலை செய்யப்பட்டுள்ளதை உலக உணவுத் திட்டம் (WFP) வரவேற்றுள்ளது.
யெமனில் அன்சார் அல்லாஹ் எனவும் அழைக்கப்படும் ஹூதி ஆயுதக் குழுவினரால் குறித்த ஊழியர் தடுத்து வைக்கப்பட்டிருந்ததாக, திங்கட்கிழமை வெளியிடப்பட்ட அறிக்கையில் WFP தெரிவித்துள்ளது.
“யெமனில் இன்னும் தடுத்து வைக்கப்பட்டுள்ள 72 ஐ.நா. பணியாளர்கள் மற்றும் ஐந்து முன்னாள் ஐ.நா. பணியாளர்கள் உள்ளிட்ட WFP ஊழியர்களுடன் நாங்கள் ஒற்றுமையுடன் நிற்கிறோம். அவர்களை உடனடியாகவும் பாதுகாப்பாகவும் விடுவிப்பதற்கான அனைத்து சாத்தியமான வழிகளையும் தொடர்ந்து முன்னெடுப்போம்” என WFP தெரிவித்துள்ளது.
யெமனில் தடுத்து வைக்கப்பட்டுள்ள அனைத்து ஐ.நா. பணியாளர்கள் மற்றும் ஏனைய மனிதாபிமானப் பணியாளர்களையும் நிபந்தனையின்றி விடுவிக்க வேண்டும் என ஐ.நா. செயலாளர் நாயகம் அன்டோனியோ குட்டரெஸ் விடுத்துள்ள அழைப்புக்கும் WFP ஆதரவு தெரிவித்துள்ளது.
ஐ.நா. வெளியிட்டுள்ள தரவுகளின்படி, யெமனில் 73 ஐ.நா. பணியாளர்களுடன் குறைந்தது 38 WFP ஊழியர்களும் தடுத்து வைக்கப்பட்டிருந்தனர்.








