யெமனில் ஹூதிகளுக்கு எதிராகப் போரிட்டு வரும் சவூதி தலைமையிலான கூட்டுப்படைகள், யெமன் தலைநகர் சனாவில் பாலிஸ்டிக் ஏவுகணைகளை ஏவுவதற்கான தளம் ஒன்றை அழித்துள்ளதாக அறிவித்துள்ளன.
அத்துடன், சஅதா பகுதியில் 20 பாலிஸ்டிக் ஏவுகணைகள் வைக்கப்பட்டிருந்த மலைப்பகுதியில் அமைந்திருந்த ஏவுகணை சேமிப்பு நிலையமொன்றும் அழிக்கப்பட்டுள்ளதாக சவூதி உத்தியோகபூர்வ செய்தி நிறுவனமான SPA தெரிவித்துள்ளது.
யெமன் தலைநகர் சனா, 2014ஆம் ஆண்டு முதல் ஹூதி அமைப்பினரின் கட்டுப்பாட்டில் இருந்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.








