இலங்கை தேசிய சர்வமத குரு ஒன்றியத்தின் தலைவர் சாஸ்த்ரபதி கலாநிதி கலகம தம்மரன்ஸி நாயக தேரர் தலைமையில், சர்வமதத் தலைவர்களின் பங்கேற்புடன் பங்களாதேஷ் உயர்ஸ்தானிகர் டீ.எம். சலாஹூதீன் மஹ்மூத் அவர்களுடனான விசேட கலந்துரையாடல் அண்மையில் கொழும்பிலுள்ள பங்களாதேஷ் உயர்ஸ்தானிகராலயத்தில் நடைபெற்றது.
இக்கலந்துரையாடலில் சிவ ஸ்ரீ கலாநிதி ராமச்சந்திர பாபுசர்மா குருக்கள், அல்-ஹாஜ் அஷ்-ஸெய்யத் கலாநிதி ஹஸன் மௌலானா அல்-காதிரி, கலாநிதி கௌரவ சஹாயராஜா அன்ரனி உள்ளிட்ட சர்வமதத் தலைவர்கள் கலந்துகொண்டனர்.
இலங்கை மற்றும் பங்களாதேஷ் ஆகிய இரு நாடுகளுக்கிடையில் மத நல்லிணக்கம் மற்றும் சகவாழ்வை மேம்படுத்துவதில் சர்வமத அமைப்புகளின் முக்கியத்துவம் தொடர்பிலும், எதிர்காலத்தில் முன்னெடுக்கப்படவுள்ள விரிவான திட்டங்கள் தொடர்பிலும் இதன்போது விசேடமாக கலந்துரையாடப்பட்டது.
பங்களாதேஷ் உயர்ஸ்தானிகராலயத்தின் ஆலோசகர் டீ.எம். ஜன்னத்துல் ஹபீபும் இக்கலந்துரையாடலில் பங்கேற்றார்.









