இலங்கையின் வேலையின்மை விகிதம் 2026ஆம் ஆண்டின் இரண்டாவது காலாண்டில் 4.0 சதவீதமாக அதிகரித்துள்ளது.மத்திய வங்கியினால் வெளியிடப்பட்டுள்ள அண்மைய வாராந்த பொருளாதார குறிகாட்டிகள் அறிக்கையில் இந்தத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
2025ஆம் ஆண்டின் இதே காலாண்டில் 3.8 சதவீதமாக காணப்பட்ட வேலையின்மை விகிதம், 2026ஆம் ஆண்டின் இரண்டாவது காலாண்டில் 4.0 சதவீதமாக அதிகரித்துள்ளது.
இதேவேளை, தொழிலாளர் பங்கேற்பு விகிதமும் அதிகரித்துள்ளது. 2025ஆம் ஆண்டின் இரண்டாவது காலாண்டில் 49.3 சதவீதமாக இருந்த தொழிலாளர் பங்கேற்பு விகிதம், 2026ஆம் ஆண்டின் இரண்டாவது காலாண்டில் 50.0 சதவீதமாக உயர்ந்துள்ளது.









